Rain Update: நாலு நாளைக்கு மழை இருக்கு… நச்சுன்னு வெளியான அப்டேட்!

Published On:

| By Manjula

moderate rain tamil nadu

moderate rain Tamil Nadu

தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 2௦) தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு மழை இருக்கும் என, வானிலை மையம் அப்டேட் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்றும், நாளையும் (மார்ச் 21) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மார்ச் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ADVERTISEMENT

இன்றும், நாளையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும்.

moderate rain tamil nadu

ADVERTISEMENT

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியங்கள் ஏற்படலாம்.

Purananooru: சூர்யா – சுதா கொங்கரா படம் கைவிடப்பட்டதா?… பின்னணி என்ன?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகம் பதிவாகியுள்ள இடம் குறித்தும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டம் 38.8 டிகிரி செல்சியஸ் உடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

Suriya: இப்படி ஒரு படத்தை ‘மிஸ்’ பண்ணிட்டாரே… புலம்பித் தீர்க்கும் ரசிகர்கள்!

கடலோர தமிழக மாவட்டங்கள்: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.

தென் தமிழக மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா

பாஜக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு விவரம்!

Ilaiyaraaja Biopic: அவரோட பயோபிக்லயும் நடிக்கணும்… ஓபனாக பேசிய தனுஷ்

தாமரை சின்னத்தை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share