ADVERTISEMENT

பீகார் வாக்கு திருட்டு, SIR, டெல்லி குண்டு வெடிப்பு, சர்ச்சை மசோதாக்கள்.. இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

Published On:

| By Mathi

Parliament

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று டிசம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 19-ந் தேதி வரை 15 அமர்வுகளாக நடைபெறும். பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியின் பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணமே வாக்கு திருட்டு என எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன; தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்ப இருக்கின்றன.

ADVERTISEMENT

மேலும்

  • அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் அணுசக்தி மசோதா 2025
  • தேசிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியாக அனைத்து உயர் கல்விகளையும் ஒருங்கிணைக்கும் உயர்கல்வி ஆணைய மசோதா
  • காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100% ஆக உயர்த்தும் காப்பீட்டு சட்ட திருத்தங்கள் மசோதா,
  • பங்கு சந்தைகளை சீரமைக்கும் மசோதா
  • பெருநிறுவனங்கள் சட்ட திருத்த மசோதா
  • தேசிய நெடுஞ்சாலைகள் மசோதா
  • மத்திய கலால் சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவையும் நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளன.

மேலும் டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப இருக்கின்றன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share