கடந்த 2008 முதல் இந்த 2024 வரை, ஐபிஎல் தொடரில் கேப்டன் தோனி வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை இங்கே பார்க்கலாம்.
கடந்த 2008-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை ரூபாய் 6 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. தொடர்ந்து 2௦1௦ வரை அதே சம்பளத்தில் தான் இருந்தார்.
2011 தொடங்கி 2013-ம் ஆண்டு வரை ரூபாய் 8.28 கோடி சம்பளத்தில் இருந்தார். 2014-2015 ஆண்டுகளில் ரூபாய் 12.5 கோடியாக சம்பளம் உயர்ந்தது.
2016-2017 காலகட்டத்தில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணிக்காக ஆடியபோதும், ரூபாய் 12.5 கோடி தான் சம்பளமாக வாங்கினார்.
மீண்டும் 2018-ம் ஆண்டு சென்னைக்குத் திரும்பிய தோனி 2021-ம் ஆண்டு வரையில், ரூபாய் 15 கோடி சம்பளமாக பெற்றார். 2௦22-ம் ஆண்டு தொடங்கி தற்போது 2024 வரை ரூபாய் 12 கோடியை சம்பளமாக பெறுகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குதாரர்களில் தோனியும் ஒருவராக இருக்கிறார். இதனால் தான் சம்பளமாக பெரும்தொகையினை வாங்காமல், அவர் கேப்டன் பொறுப்பினை வகித்து வருவதாகக் கூறப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உள்ளூர் தொழில்முனைவோருக்கான புதிய செயலி… தொடங்கி வைத்த பிடிஆர்