கோடையில் ஏற்படும் சரும வறட்சியை நீக்கி வியர்வைப் பெருக்கியாக செயல்படும் தன்மை, முட்டைகோஸுக்கு உண்டு. வழக்கமாக கோஸில் பொரியல், கூட்டு என்று செய்து சாப்பிடுவோம். இந்தக் கோடையில் கோஸை ஃபிரெஷ் சாலட்டாகச் செய்து சாப்பிடுங்கள். நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருங்கள்.
என்ன தேவை?
முட்டைகோஸ், கேரட், பச்சை திராட்சை – தலா 100 கிராம்
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
கோஸ், கேரட்டை மெல்லியதாக, நீள நீளமாக நறுக்கி, ஒரு பவுலில் சேர்த்து… அதனுடன் பச்சை திராட்சை, உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள், ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து பரிமாறவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…