சர்வதேச வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் போராட்டம்: எதற்காக?

Published On:

| By Selvam

சர்வதேச வேளாண் கண்காட்சியில் திடீரென அத்துமீறி நுழைந்த விவசாயிகள் சிலர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்ஸில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக மனம் குமுறும் பிரான்ஸ் விவசாயிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கட்டுப்பாடுகள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

குறைந்த விலையில் கிடைக்கும் வெளிநாட்டு இறக்குமதிகளை அரசு நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து, பிரான்சின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கப்ரியேல் அட்டால் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இதன் காரணமாக, விவசாயிகள் போராட்டம் சில நாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

அதன் ஒரு பகுதியாக, பாரிஸ் வேளாண் கண்காட்சியில் திடீரென அத்துமீறி நுழைந்த விவசாயிகள் சிலர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரான்ஸ் அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதன் காரணமாக, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து வேளாண் கண்காட்சியை பார்வையிட்டு, அங்கு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டிருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பவுலிங்கில் மிரட்டிய ஷோபனா ஆஷா: RCB கடைசி பந்தில் த்ரில் வெற்றி!

உதயசூரியன் நாடு: கடல் கடந்த கலைஞரின் புகழ்!

சம்மர் ஸ்பெஷல் ஹெல்த் டிப்ஸ்: தினமும் இளநீர் பருகுவது ஆபத்தா?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்.. சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share