தரமற்ற இலவச சைக்கிள்கள்… விற்கும் மாணவர்கள் : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

Published On:

| By christopher

'Free substandard bicycle for students': p. Chidambaram

பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்கள் வழங்கப்படுவதாகவும், இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுதோறும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்களுக்கு  வழங்கப்படும் இந்த சைக்கிள்கள் தரமற்றவையாக இருப்பதாக புகார் எழுந்து வருகிறது. இதனால் பள்ளிக்கு குறித்த நேரத்தில் செல்ல வழங்கப்படும் இலவச சைக்கிள்களை மாணவர்கள் உபயோகிக்க முடியாத சூழல் உள்ளது.

இதுதொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில், “தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே?

இந்தத் தரமில்லாத சைக்கிள்களைத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

யுஜிசி நெட் மறுதேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு!

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த வடிவேலு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share