குரூப் 1 நேர்முகத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி!

Published On:

| By christopher

குரூப் 1 நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சியை சேவா பாரதியின் பாரதி பயிலகம் மற்றும் பி.எல்.ராஜ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து வரும் மார்ச் 24ம் தேதி நடத்துவதாக, பாரதி பயிலகம் – சேவா பாரதியின் தமிழ்நாடு இயக்குனர் தன்ராஜ் உமாபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த ஆண்டு தமிழக அரசு நடத்திய குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்குச் செல்ல இருக்கும் மாணவர்களுக்கு மனவலிமை மற்றும் அறிவுக்கூர்மையை உயர்த்திக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பாக வருகிற மார்ச் 24 ஞாயிறு அன்று காலை 10 மணியளவில், IAS, IPS, IRS போன்ற அரசின் உயர் பதவிகளில் பணியாற்றும் மற்றும் பணியாற்றி ஓய்வுபெற்ற, அரசுத் துறைகளில் பல்லாண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு இப்பயிற்சியினை அளிக்க இருக்கிறோம். மேலும் நேர்முகத்தேர்வை, பதற்றமின்றி சந்தித்து வெற்றி பெற மனநல நிபுணரின் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வுக்கான இலவசப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற contactbharathi57@gmail.com என்ற மின்னஞ்சலில் பதிவு செய்யக் கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு 9003242208 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பூண்டு ஊறுகாய்

சிலிண்டர் விலையை குறைக்க குட் ஐடியா: அப்டேட் குமாரு!

நாடாளுமன்ற தேர்தல்: ஸ்டாலின் பிரச்சார பயண திட்டம் முழு விவரம் இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share