திருவண்ணாமலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் தீபமலை குகையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.france woman sexually attack by guide
கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் திருவண்ணாமலை வந்து தனியார் ஆசிரமத்தில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில், தீபமலையிலுள்ள குகையில் தியானம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று கூறி அந்த பெண்ணை வெங்கடேசன் என்ற டூரிஸ்ட் கைட் ஆசைக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவையடுத்து தீபமலையில் பக்தர்கள் ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி, அந்த பெண்ணை தீபமலைக்கு அழைத்து சென்றுள்ளார் வெங்கடேசன்.
மலையில், கிட்டத்தட்ட 2,668 அடி உயரத்திலுள்ள குகை ஒன்றை காட்டி தியானம் செய்யுங்கள் என்று வெங்கடேசன் கூறியுள்ளார். குகைக்குள் சென்று அந்த பெண் தியானத்தில் ஈடுபட்ட போது, வெங்கடேசன் உள்ளே புகுந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து தப்பி கீழே வந்த அந்த பெண், திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், விசாரணை நடத்தி டூரிஸ்ட் வழிகாட்டி வெங்கடேசனை கைது செய்தனர். france woman sexually attack by guide
ஆன்மீகத்துக்கு பெயர் பெற்ற திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில், ரமண மகரிஷி ஆசிரமம் உட்பட 14 புனித தலங்கள் உள்ளன. ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட வெளிநாட்டினர் நீண்ட காலமாக திருவண்ணாமலையில் வந்து தங்கியிருப்பது வழக்கமானது.