ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒயின் அருந்தும் பழக்கம் குறைந்து சரிவை சந்தித்துள்ள நிலையில் ஒயின் உற்பத்தியாளர்களைக் காக்க ரூ.1700 கோடி செலவிடுகிறது பிரான்ஸ் அரசாங்கம்.
ஐரோப்பிய மதுப்பிரியர்களின் மது அருந்தும் பழக்கம் குறித்து ஐரோப்பிய கமிஷன் ஜூன் மாதத்துக்கான ஒரு தரவை வெளியிட்டது.

இதன்படி ஒயின் அருந்தும் பழக்கம் சரிவை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது. நாடுகள் வாரியாக, இத்தாலியில் 7 சதவிகிதம், ஸ்பெயினில் 10 சதவிகிதம், பிரான்ஸில் 15 சதவிகிதம், ஜெர்மனியில் 22 சதவிகிதம் மற்றும் போர்ச்சுகலில் 34 சதவிகிதம் என்று சதவிகிதம் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சில வருடங்களாகவே மக்களின் வாங்கும் சக்தி பொருளாதார காரணங்களால் குறைந்துள்ளது.
பெரும்பாலான மக்கள் தொழிற்சாலை சாராத வழியில் தயாரிக்கப்படும் பீர் மதுபானத்தை விரும்பி அருந்த தொடங்கியுள்ளனர்.
இதனால் ‘அதிக உற்பத்தி ஆனால் குறைவான விற்பனை’ எனும் நிலை தோன்றி ஒயின் வியாபாரம் சரிவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் அதிகப்படியாக உற்பத்தியாகி உள்ள ஒயின் மதுபானத்தை அழிக்கவும், அதேநேரம் ஒயின் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கவும், பிரான்ஸ் அரசாங்கம் சுமார் ரூ.1,782 கோடி (200 மில்லியன் யூரோ) செலவிடுகிறது.

அதிக ஒயின் பானங்களையும், கைகளை சுத்தம் செய்ய உதவும் சானிடைசர், சுத்திகரிப்பு பொருட்கள், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் வகைகளை அரசாங்கம் வாங்கி கொள்வதற்கும்,
ஒயின் உற்பத்தியாளர்களை ஆலிவ் போன்ற மாற்று விவசாய உற்பத்தியில் ஈடுபட ஊக்குவிக்கவும் இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது.
“அரசு உதவி செய்தாலும் மது உற்பத்தியாளர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து தாங்களாகவே திட்டமிட்டு, உபயோகிப்பாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தங்கள் தயாரிப்புகளை மாற்றிக்கொள்ள வேண்டும்” என பிரான்ஸ் நாட்டு விவசாயத் துறை அமைச்சர் மார்க் ஃபெஸ்னு தெரிவித்துள்ளார்.
ராஜ்
ஓணம் பண்டிகை: தமிழகத்தில் பூக்கள் விலை அதிகரிப்பு!
ரூ.1000 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்க இலக்கு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடுபவரா நீங்கள்?
