மருத்துவமனையில் வைகோ… துரை வைகோ சொன்ன ஷாக் தகவல்!

Published On:

| By Aara

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டில் தவறி விழுந்துவிட்டதால் கையில் அடிபட்டிருப்பதாக அவரது மகனும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக, அக்கட்சியின்  பொதுச் செயலாளர் வைகோ நேற்று திருநெல்வேலி சென்றார். ஆனால் இன்று (மே 26)  காலை திருமண விழாவில் பங்கேற்காமல் சென்னை திரும்பினார்.

ஏனென்று விசாரித்தபோதுதான்… “நேற்று இரவு எதிர்பாரா விதமாக  தனது வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில் வைகோவின் வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அதனால், தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு வைகோ உடல் நலம் பெறுவார். வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை” என்று துரை வைகோ விடுத்த செய்தியில் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார்: கொளத்தூர் மணி கடிதம்!

மதுரை: பரோட்டா மாஸ்டர் ஆவதற்கு கோச்சிங் கிளாஸா? என்னமா யோசிக்கிறாங்க..!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share