திருமணமான பெண்களை பணியமர்த்த மறுக்கும் ஃபாக்ஸ்கான்: மத்திய அரசு நோட்டீஸ்

Published On:

| By indhu

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களை பணியமர்த்த மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், தமிழக அரசுக்கு நேற்று (ஜூன் 26) நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலையில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையில் திருமணமான பெண்களைப் பணியமர்த்த மறுப்பதாக செய்திகள் வெளியானது.

ADVERTISEMENT

இதுகுறித்து விளக்கம் அளிக்ககோரி, தமிழக அரசிற்கு, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நேற்று (ஜூன் 26) நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Foxconn refuses to hire married women: Central govt notice

ADVERTISEMENT

அதில், “ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் எந்தவித பாகுபாடும் காட்டக்கூடாது என்பதை சம ஊதியச் சட்டம் 1975ன் 5வது பிரிவு தெளிவாக எடுத்து உரைக்கிறது.

இந்தச் சட்டப்பிரிவை அமல்படுத்தி நிர்வகிப்பதற்குரிய அதிகாரம் மாநில அரசிற்கு மட்டுமே இருப்பதால், ஃபாக்ஸ்கான் விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த விவகாரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மண்டல தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கும் உத்தரவிட்டப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அல்லாள நாயகருக்கு அரசு விழா: கொங்கு அரசியலில் இன்னொரு ஸ்டெப்!

திடீர் உடல்நலக்குறைவு: அத்வானி மருத்துவமனையில் அனுமதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share