திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கீழ்குடி கிராமத்தில் புத்தாறு ஆற்றில் உள்ள தடுப்பணையில் குளித்து கொண்டிருந்த 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நன்னிலம் அருகே வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் காரில் கீழ்குடி வழியாக சென்ற போது காரை நிறுத்திவிட்டு அனைவரும் புத்தாறு ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர். இளைஞர்கள் நீரில் மூழ்கி தத்தளிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் பரிதாபமாக 4 இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கீழ்குடியில் இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள் விவரம்:
- ஜெயக்குமார் (த/ பெ. பாவாடை , வில்லியனூர் )
- ஹரிஹரன் (த/ பெ.ரவி ராஜன், வில்லியநல்லூர்)
- மணிகண்டன் (ஊராட்சி செயலாளர் த/பெ.சேகர், வில்லியனூர்)
- மணிவேல் (த/பெ. அசோகன், முருகன்குடி)
தீயணைப்புத் துறையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
