எல்லாருமே நலமாக வாழ வேண்டும் என்று நினைத்துத்தான் வாழ்கிறோம். ஆனால் நடைமுறையில் வாழ்க்கையில் சிலவற்றை மறந்துவிடுகிறோம்.
இந்த நான்கு விஷயங்களைக் கடைப்பிடித்தால் போதும்… எல்லாரும் நலமாக வாழலாம் என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
1. ஹெல்த்தி டயட்
தினமும் இரண்டு வகையான பழங்கள், மூன்று வகையான காய்கறிகளை சாப்பிடுங்கள். பிரேக்ஃபாஸ்ட்டில் பருப்பு அடை, காய்கறி உப்புமா, இட்லி சாம்பார், சிறுதானிய பொங்கல் என்று தினம் ஒன்றாக சாப்பிடுவது நல்லது.
இரண்டு முறைக்கு மேல் காபி, டீ வேண்டாம்.
2. தொடர் உடற்பயிற்சிகள்
காலையில் உடற்பயிற்சி செய்வது, அன்றைய நாள் முழுவதும் புத்துணர்வுடன் வைத்திருக்கும். டென்னிஸ், வாலி பால் என பிடித்தமான எந்த விளையாட்டாக இருந்தாலும், அரை மணி நேரமாவது ஒதுக்குவது நல்லது.
3. ரிலாக்ஷேசன்
தூங்கச்செல்லும் முன் மனதுக்குப் பிடித்த பாடல்கள் கேட்பது, புத்தகம் வாசிப்பது போன்ற பழக்கங்களை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நல்ல நல்ல ஜோக்குகள், நகைச்சுவை வீடியோக்கள் பார்ப்பதால் நமது உடலும் மனமும் ரிலாக்ஸாகும்.
4. தேவையான அளவு ஓய்வு
குறைவான தூக்கம், பல நோய்களுக்கும் காரணமானதோடு நமது அன்றாட வேலைகளையும் நாம் சிறப்பான முறையில் செய்வதற்கு தடையாக அமையும்.
சரியான தூக்கம் தொடர்ச்சியாக இல்லையென்றால், உடல் பலவீனம், தலைவலி போன்ற பிரச்சினைகள் வரும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: காணும் பொங்கல் முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரை!