டயட்
தினமும் இரண்டு வகையான பழங்கள், மூன்று வகையான காய்கறிகளை சாப்பிட வேண்டும். பிரேக்ஃபாஸ்ட் – பருப்பு அடை, காய்கறி உப்புமா, இட்லி சாம்பார், சிறுதானிய பொங்கல் போன்றவை நல்லது. இரண்டு முறைக்கு மேல் காபி, டீ வேண்டாம்.
உடற்பயிற்சிகள்
காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் மூளையில் என்டார்ஃபின் நன்கு சுரக்கும். இது, மகிழ்ச்சியான, பாசிட்டிவ் எண்ணங்களை ஏற்படுத்தும். டென்னிஸ், வாலி பால் என பிடித்தமான எந்த விளையாட்டாக இருந்தாலும், அரை மணி நேரமாவது ஒதுக்குவது நல்லது.
ரிலாக்சேஷன்
தூங்கச்செல்லும் முன் மனதுக்குப் பிடித்த பாடல்கள் கேட்பது, புத்தகம் வாசிப்பது போன்ற பழக்கங்களை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நல்ல நல்ல ஜோக்குகள், நகைச்சுவை வீடியோக்கள் பார்ப்பதால் நமது உடலும் மனமும் ரிலாக்ஸாகும்.
ஓய்வு
குறைவான தூக்கம், பல நோய்களுக்கும் காரணமானதோடு நமது அன்றாட வேலைகளையும் நாம் சிறப்பான முறையில் செய்வதற்கு தடையாக அமையும்.
சரியான தூக்கம் தொடர்ச்சியாக இல்லையென்றால், உடல் பலவீனம், தலைவலி போன்ற பிரச்னைகள் வரும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – பிரியாணி சமைக்கப் போறீங்களா? இப்படிச் செய்து பாருங்க!
டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு… இரண்டாவது இடைத் தேர்தல்- திமுகவில் தொடங்கிய ஆலோசனை!