திருவள்ளூர் அருகே கோர விபத்து… கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் பலியான சோகம்!

Published On:

| By Selvam

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் காரில் பயணித்த கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த வர்மா, சேத்தன், விஷ்ணு, யுகேஷ், ராம்கோமன், நித்திஷ், சைதன்யா ஆகிய ஏழு மாணவர்கள் சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.

நேற்று (ஆகஸ்ட் 11) விடுமுறை என்பதால் ஏழு பேரும் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் மீண்டும் நேற்று இரவு சென்னைக்கு திரும்பியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ராமஞ்சேரி பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்துகொண்டிருந்தபோது, ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லாரியானது, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

காரில் பயணித்த யுகேஷ்,சேத்தன், ராம்கோமன், நித்திஷ், வர்மா ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக அங்கு வந்த கனகம்மாசத்திரம் காவல்துறையினர் கடப்பாரையைக் கொண்டு காரில் சிக்கியிருந்த மாணவர்களை மீட்டனர். மாணவர்கள் விஷ்ணு, சைதன்யா ஆகியோர் விபத்தில் படுகாயமடைந்தனர்.

அவர்களை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வ்ருகின்றனர். மேலும், தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விபத்தின் காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சரிசெய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நிரம்பியது வீராணம் ஏரி… மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்!

ஹெல்த் டிப்ஸ்: ஆழ்ந்த உறக்கத்துக்கு எந்த மெத்தை, தலையணை சிறந்தது?

டாப் 10 நியூஸ்: மருத்துவர்கள் போராட்டம் முதல் கங்குவா டிரெய்லர் ரிலீஸ் வரை!

சமூக நீதிக்கு எதிரான “கிரீமி லேயர் விலக்கம்” என்ற கருத்தாக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share