மத்திய அரசின் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று நவம்பர் 21-ந் தேதி முதல் அமலாகி இருக்கிறது. இந்த சட்டங்கள் அமலுக்கு வந்ததற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில்
- தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019
- தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020
- சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020
- தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020
ஆகியவை இன்று (21.11.2025) முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து நான்கு சட்டங்களாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
- தொழிலாளர் விதிகள் தொடர்பான ஒழுங்குமுறை விதிகளை நவீனமயமாக்குவது
-தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்துவது - தொழிலாளர்களின் பணியிடச் சூழலை சீரமைப்பது
போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த நான்கு புதியச் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தற்சார்பு இந்தியாவிற்கான தொழிலாளர் சீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக எதிர்காலத்திற்கு உகந்த வகையில், இந்தச் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதிய சட்டங்கள் ஏன்?
ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்கள், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவோ அல்லது சுதந்திரம் அடைந்த பின்னர் அதாவது (1930-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டு வரை) இயற்றப்பட்டவையாக இருந்தன. அப்போது இருந்த நாட்டின் பொருளாதார சூழல் மற்றும் உலக அளவிலான தொழிலாளர்கள் சூழல் அமைப்புகள் வேறுபட்டு இருந்தன.
நாட்டின் நடைமுறையில் இருந்த 29 மத்திய தொழிலாளர் சட்டங்கள் சிக்கல் நிறைந்ததாகவும், பல்வேறு சட்டங்களாக சிதறுண்டதாகவும் தற்போதைய காலத்திற்கு பொருந்தாத வகையிலும் இருந்ததால், அவை எளிமைப்படுத்தப்பட்டு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நான்கு சட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மோடி சொன்னது என்ன?
பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இன்று, நமது அரசு நான்கு தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இது நமது தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கிறது. இது இணக்கத்தை கணிசமாக எளிதாக்குவதுடன், ‘வணிகம் செய்வதையும் எளிதாக்குகிறது.’
“இந்தச் சட்டங்கள் உலகளாவிய சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச மற்றும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல், பாதுகாப்பான பணியிடங்கள் மற்றும் நமது மக்களுக்கு, குறிப்பாக மகளிர் சக்தி மற்றும் இளைஞர் சக்திக்கு ஊதிய வாய்ப்புகளுக்கான வலுவான அடித்தளமாக செயல்படும்.”
“இது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் சூழல் அமைப்பை உருவாக்கும். இந்தச் சீர்திருத்தங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கும், உற்பத்தித்திறனை அதிகரிக்கும் மேலும், ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய நமது பயணத்தை துரிதப்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதிய சட்டங்கள் சொல்வது என்ன?
ஊதியச் சட்டம் 2019:

சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020

தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020

