ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி எடுத்து சென்ற நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் வேலைபார்த்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரூ.4 கோடி உள்பட மேலும் ரூ.65 கோடி சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்து பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் மற்றும் நயினார் நாகேந்திரன் மூலமாக பட்டுவாடா செய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து உதயநிதி வீட்டுக்கு எதிரே… பாஜக வேட்பாளர்களுக்கு ரூ.65 கோடி… சிக்கும் சிசிடிவி காட்சிகள்… சிக்குவாரா கேசவ விநாயகன்? என்ற தலைப்பில் நேற்று (ஏப்ரல் 13) நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…