கேரளா முன்னாள் முதல்வரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Kerala Achuthanandan
இந்தியாவின் முதுபெரும் இடதுசாரித் தலைவரான அச்சுதானந்தனுக்கு வயது 101. கேரளா மாநிலத்தில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தவர்.
திருவனந்தபுரத்தில் தமது வீட்டில் இருந்த போது கடந்த ஜூன் 23-ந் தேதி அச்சுதானந்தனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரம் Sree Uthradom Thirunal மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அச்சுதானந்தன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேரளா முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் சிவன்குட்டி, ராஜேஷ், முன்னாள் அமைச்சர் ஷைலஜா, லூலூ குழும தலைவர் யூசுப் அலி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அச்சுதானந்தன் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.