கேரளா மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி (வயது 79) பெங்களூரில் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார்.
கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனிடையே அவருக்கு கேன்சரும் இருந்து வந்தது.
இந்நிலையில், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக் குறைவால் இன்று (ஜூலை 18) காலமானார்.
சிகிச்சைக்காக பெங்களூரு சின்மயா மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் உயிரிழந்தார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.
உம்மண் சாண்டியின் மறைவிற்கு கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. சுதாகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அன்பின் சக்தியால் உலகை வென்ற மன்னனின் கதை முடிவுக்கு வந்தது.
ஒரு மாபெரும் தலைவரின் இறப்பால் நான் இன்று மிகவும் வருந்துகிறேன். எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் நீங்கள் இருக்கிறீர்கள். ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்