ரிஷிவந்தியம் அருகில் உள்ள பிரிவிடையான்பட்டைச் சேர்ந்த சின்னப்பா, புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமனின் இரண்டாவது மகன் சந்திரேஷ்குமார்மீது, ரூபாய் 15 லட்சம் செக் மோசடி வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி சண்முகராஜ் குற்றம் சாட்டப்பட்ட சந்திரேஷ்குமார் இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததாலும், அவர்மீதான செக் மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாலும், அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்தத் தீர்ப்பு புதுச்சேரியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.