திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி

Published On:

| By Pandeeswari Gurusamy

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (டிசம்பர் 3) திமுகவில் இணைந்தார்.

ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சின்னசாமி. 2006-ம் ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது ஐஎன்டியுசி பிளவடைந்த நிலையில் சின்னசாமி தலைமையிலான அணியினர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தனர். அப்போது இரட்டை இலை சின்னத்தில் நின்று சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்று சின்னசாமி எம்.எல்.ஏ.வாக தேர்வானார். அதன் பின்னர் அதிமுகவில் அவர் இணைந்தார்.

ADVERTISEMENT

மீண்டும் 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கார்திக்கிடம் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தபோது ரூ.8 கோடியை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் கோவையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

ADVERTISEMENT

பின்னர் சின்னசாமி டிடிவி தலைமையிலான அமமுகவில் இணைந்தார். கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரியில் பாஜகவில் இணைந்தவர் சில மாதங்களில் மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

தொடர்ந்து அதிமுகவில் அதிருப்தியில் இருந்து வந்த சின்னசாமி இன்று சென்னை அண்ணா அறிவாலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share