முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ். மணியன் சென்ற கார் இன்று (அக்டோபர் 5) விபத்தில் சிக்கியது. சிறு காயங்களுடன் உயிர் தப்பிய அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் எம்.எல்.ஏவுமான ஓ.எஸ் மணியன் கிழக்கு கடற்கரை சாலையில் நாகப்பட்டிணம் நோக்கி இன்று காரில் வந்து கொண்டிருந்தார்.
தலைஞாயிறு பகுதி அருகே அவரது கார் வந்தபோது, அதே சாலையில் எதிரே அன்பழகன் என்பவர் பைக்கில் வந்துள்ளார்.
இதனால் பதற்றமடைந்த ஓ.எஸ் மணியன் கார் ஓட்டுநர், பைக் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த திருப்பூண்டி பெரியாச்சி கோயில் மதில் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சீட் பெல்ட் அணிந்திருந்ததால் விபத்தில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய ஓ.எஸ். மணியனும், அவரது கார் ஓட்டுநரும் நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
அதேவேளையில், காரின் முன்பக்க பகுதி சேதமடைந்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா