கே.பி.அன்பழகனின் மருமகள் உயிரிழப்பு : என்ன நடந்தது?

Published On:

| By Kavi

KP Anbazhagan daughter-in-law dies

KP Anbazhagan daughter-in-law dies

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் தீக்காயத்துக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஜனவரி 25) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ADVERTISEMENT

கடந்த அதிமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தற்போது பாலக்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

இவருக்கு சந்திரமோகன், சசிமோகன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். சசிமோகனுக்கும் சென்னையைச் சேர்ந்த மனோகரன் மகள் பூர்ணிமாவுக்கும் கடந்த 2019ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை  உள்ளது. இவர்கள் தருமபுரி மாவட்ட பாலக்கோடு கிராமத்தில் வசித்து வந்தனர்.

ADVERTISEMENT

கடந்த ஜனவரி 18ஆம் தேதி பூஜை அறையில் பூர்ணிமா விளக்கு ஏற்றிய போது, அவர் கட்டியிருந்த பட்டுப்புடவையில் தீ பற்றியுள்ளது.

பட்டுப்புடவை என்பதால் தீ மளமளவென பரவியதாகவும், அப்போது வீட்டில் இருந்த பணிப்பெண் வந்து அணைத்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

தீ அணைக்கப்பட்ட போதிலும் பூர்ணிமா உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் உள்ளூரிலேயே சிகிச்சை அளித்து, பின்னர் வேலூர் சி.எம்.சி.யில் அனுமதித்திருக்கின்றனர்.  அங்கு கடந்த ஒரு வாரமாகச் சிகிச்சை பெற்று வந்த பூர்ணிமாவை மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை டாக்டர் ஆஷிஷ் குமார் குப்தா தலைமையிலான நிபுணர்கள் குழு அவருக்கு அறுவை சிகிச்சை ஐசியூ வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்தது. கே.பி.அன்பழகனின் குடும்பத்தினரும் மருத்துவமனையிலேயே இருந்துள்ளனர்.

கே.பி.முனுசாமி, கே.சி.வீரமணி, சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வந்துள்ளனர்.

அதுபோன்று தருமபுரி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் பூர்ணிமாவிடம் வாக்குமூலம் பெற்றார். இந்தச்சூழலில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.40 மணியளவில் பூர்ணிமா உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வடக்கு வேலூர் காவல்நிலையத்துக்கு சிஎம்சி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த மரணம் தொடர்பாக போலீசார் தரப்பில், “உடலில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூர்ணிமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விதிமுறைகளின் படி வேலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு பூர்ணிமாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்” என்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அதிமுக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்? – ஜெயக்குமார் விளக்கம்!

டொவினோ தாமஸ் படத்தின் டைட்டில் மாற்றம்: காரணம் இதுதான்!

KP Anbazhagan daughter-in-law dies

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share