அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 15) நடைபெற்று வரும் நிலையில், அதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். அனைத்து அதிமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
முதலில் 16 பொதுக்குழு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில் கட்சித் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்காக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வானகரத்திற்கு வந்திருந்தார்.
ஆனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து பொதுக்குழுவில் அவர் வாசிப்பதாக இருந்த கட்சி வரவு செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாசித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேறிய 16 தீர்மானங்கள் : முழு விவரம்!