கொடுக்குறது 70 ஓவா… இதுக்கு டாய்லெட் இப்படிதான் இருக்கும்!- அமெரிக்க பெண்ணுக்கு இந்தியர்கள் பதிலடி!

Published On:

| By Kumaresan M

சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி இரினா என்பவர் உதய்ப்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு இன்டர்சிட்டி ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணித்துள்ளார். அப்போது, டாய்லெட்டுக்கு சென்ற அந்த பயணி அது இருந்த நிலையைக் கண்டு  அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக, டாய்லெட்டை வீடியோவாக எடுத்து’ இந்திய ரயில்வேயின் வெஸ்டர்ன் டாய்லெட்டின் நிலையை பாருங்கள்’ என்ற தலைப்பில் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒரு சிலர் ரயில்வேயின் கவனத்துக்கு கொண்டு சென்றதற்காக அவருக்கு  பாராட்டு தெரிவித்தாலும் பலரும் இரினாவை கடுமையாக விமர்சித்துள்ளனர். நீங்கள் உங்கள் பட்ஜெட்டை உயர்த்தி முதல் வகுப்பில் செல்ல வேண்டும். இந்த டாய்லெட் சுத்தமாகத்தான் உள்ளது. இந்தியாவை குறைத்து வீடியோ வெளியிட வேண்டாம். எந்த ஒரு நாடும் பெர்பக்ட்டாக இருப்பதில்லை என்று ஒருவர் இரினாவை கடுமையாக சாடியுள்ளார்.

கொடுக்குறது 70 ரூபா இதற்கு ஃபைவ் ஸ்டார் வசதியா கிடைக்கும்? என்று மற்றொருவர் கடுப்பாக கேட்டுள்ளார். இன்னொருவர் ஏழை வெள்ளக்காரப் பெண்… ஏன் வந்தேபாரத்தில் செல்லவில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

அடுத்த முறை எங்கள் அழகான நாட்டுக்கு வரும்போது கூடுதலாக பணம் கொண்டு வாருங்கள். வந்தேபாரத் , சதாப்தி போன்ற ரயில்களில் பயணியுங்கள். அதை விட்டுவிட்டு இப்படி வீடியோ எடுத்து கொண்டு அலையாதீர்கள் என்று மற்றொருவர் சாடியுள்ளார்.

நல்ல பட்ஜெட்டுடன் வாருங்கள் … இல்லையென்றால் உங்கள் நாட்டிலேயே இருங்கள் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.  ரயில்களில் எவ்வளவோ வசதிகள் உள்ளன. ஆனால், அழுக்கு மனம் கொண்டவர்கள் அழுக்கையே வீடியோவாக எடுத்து வெளிப்படுத்துவர்கள் என்று இன்னொருவர் இரினாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 ஜெயலலிதா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தால்… எஸ்.பி.வேலுமணி ரிப்பீட்!

24 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த அலைபாயுதே கார்த்திக் -சக்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share