ADVERTISEMENT

‘ஆபரேஷன் சிந்தூர்’ ஏன்? – வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கம்!

Published On:

| By Selvam

Foreign Secretary Vikram Misri says Operatio

பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி தாக்குதலை பாகிஸ்தான் மீது தொடுத்துள்ளது இந்தியா. Foreign Secretary Vikram Misri says Operation

இந்த தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பஹல்காம் தாக்குதலுக்கு ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தக் குழு லஷ்கர்-இ தொய்பாவுடன் தொடர்புடையது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு இருக்கும் தொடர்புகள் நிறுவப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் இந்தியாவின் உளவுத்துறை அமைப்புகள், இந்தியா மீது மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. மேலும், அவற்றை நிறுத்தி சமாளிப்பது அவசியம் என்று கருதப்பட்டது.

ADVERTISEMENT

பஹல்காமில் நடந்த தாக்குதல் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது. காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தெளிவாகிறது. தாக்குதல் நடந்து பதினைந்து நாட்கள் கடந்துவிட்ட போதிலும், பாகிஸ்தானிடமிருந்து அதன் பகுதியில் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்புக்கு எதிராக எந்த ஒரு தெளிவான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார். Foreign Secretary Vikram Misri says Operation

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share