உலகக்கோப்பை கால்பந்து: வெளியேறியது ஜெர்மனி

Published On:

| By Prakash

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் ஜெர்மனி அணி வெளியேறியது.

22ஆவது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இதில், நேற்று (டிசம்பர் 1) நள்ளிரவு தோகாவில் உள்ள அல் பைட் மைதானத்தில் நடைபெற்ற கடைசிகட்ட லீக் போட்டியில், ‘இ’ பிரிவில் அங்கம் வகிக்கும் ஜெர்மனி மற்றும் கோஸ்டாரிகா அணிகள் மோதின.

பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஜெர்மனி வீரர் செர்ஜ் நாப்ரி தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார்.

ADVERTISEMENT

இதையடுத்து அந்த அணி, முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியின் 58வது நிமிடத்தில் கோஸ்டாரிகா அணி வீரர் எல்ட்சின் தேஜேடா முதல் கோல் அடித்து சமநிலைக்கு வழிவகுத்தார்.

ADVERTISEMENT

அவரைத்தொடர்ந்து சக அணி வீரர் வர்காஸ் 70வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார்.

football worldcup germany won

இந்த பரபரப்பான சூழலில் ஆட்டத்தின் 73 மற்றும் 85-வது நிமிடங்களில் ஜெர்மனி அணி வீரர் காய் ஹேவர்ட்ஸ் இரண்டு கோல்கள் அடிக்க ஆட்டம் ஜெர்மனி பக்கம் திரும்பியது.

தொடர்ந்து மற்றொரு ஜெர்மனி வீரரான நிக்லஸ் புல்க்ரூக்கும் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஜெர்மனியின் ஆதிக்கத்தால், கோஸ்டாரிகா அணியால் எதுவும் செய்ய முடியவில்லை. முடிவில் கோஸ்டாரிகாவை 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வீழ்த்தியது.

இருந்தபோதும் ஜெர்மனி அணியால் 2வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதிபெற முடியாமல் போனது.

நேற்று நடைபெற்ற ஜப்பானுக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் டிரா செய்திருந்தால்கூட, ஜெர்மனி அடுத்த சுற்றுக்குள் நுழைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இ பிரிவில் ஜப்பான் அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஸ்பெயின் அணி 4 புள்ளிகளுடன் 2வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெற்றது. இ பிரிவில் இடம்பெற்றிருந்த ஜெர்மனி மற்றும் கோஸ்டாரிக்கா அணிகள் முறையே 3 மற்றும் 4வது இடம்பெற்று போட்டியில் இருந்து வெளியேறின.

ஜெ.பிரகாஷ்

இந்து கோயில்களை விடுவிக்க வேண்டும்: முதல்வருக்கு சு.சுவாமி கடிதம்!

உலகக்கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share