விஜய் மீது காலணி வீச்சு: காவல் நிலையத்தில் புகார்!

Published On:

| By Monisha

foot wear on actor vijay

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் விஜய் மீது காலணி வீசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

ADVERTISEMENT

அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் டிசம்பர் 28 ஆம் தேதி இரவு கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்துவதற்காக சென்றிருந்தார்.

ADVERTISEMENT

அப்போது அங்கு கூட்டத்தில் இருந்த ஒருவர் விஜய் மீது காலணியை தூக்கி வீசினார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் நடிகர் விஜய் மீது காலணி வீசிய அடையாளம் தெரியாத நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் அப்புனு சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், “கடந்த டிசம்பர் 28 அன்று விஜயகாந்த் மறைவிற்கு துக்கம் விசாரிப்பதற்காக இரவு சுமார் 10:30 மணி அளவில் விஜய் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது விஜய் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலணியை கழற்றி எரிந்துள்ளார்.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விஜய் ரசிகர்கள், சொந்தங்கள் மற்றும் அவர் மீது பாசத்தை வைத்துள்ள ஒட்டுமொத்த மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும்,

அருவருக்கத்தக்க இம்மாதிரியான செயலில் ஈடுபட்ட, அந்த நபரை கண்டுபிடித்து அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் படியும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை!

பாஜகவின் நோக்கமே இதுதான் : ED சம்மன் குறித்து கெஜ்ரிவால் பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share