முகம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க சூப்பர் டிப்ஸ்.. இத சாப்பிடுங்க போதும்..!

Published On:

| By Santhosh Raj Saravanan

foods to keep facial skin healthy and glowing

நமது முக சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள உதவி புரியும் சில உணவுப் பொருட்களை பார்க்கலாம்.

நாம் அனைவருக்கும் முகம் எப்போதும் பிரஷ்ஷாக, பொலிவுடன் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால் வெயில், மாசு உள்ளிட்ட காரணங்களால் நம்மால் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள முடியாத சூழல் உள்ளது. நாம் முக அழகை கூட்டுவதற்காக விலை உயர்ந்த பொருட்கள், க்ரீம்கள், பேஸ் வாஷ்களில் அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால், நம் வீட்டின் சமையல் அறையில் இருக்கும் பொருட்களை வைத்தே இயற்கையாக நம் முக அழகை கூட்ட முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. சில உணவுகளை சாப்பிடுவது நம் முக அழகை பராமரிக்கவும், சருமம் பளபளப்பாக இருக்கவும் உதவி புரிகிறது. அந்த உணவுப் பொருட்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ADVERTISEMENT

தக்காளி (Tomato): நம் அனைவரின் வீட்டிலும் அன்றாட உணவுக்கு தக்காளி பயன்படுத்துவது இயல்பான ஒன்றாகும். தக்காளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதில் லைகோபின்கள் அதிகமாக உள்ளதால் இளமையிலேயே வயதானது போல தோற்றம் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும் தக்காளி உதவுகிறது. தக்காளியை நாம் சூப் வைத்து குடித்தால் நமக்கு இன்னும் பலன் கிடைக்கும்.

இஞ்சி (Ginger): நமது சமையல் அறையில் எளிதாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் இஞ்சியும் ஒன்றாகும். முக அழகுக்காக பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்களில் இஞ்சியும் ஒரு பொருளாக சேர்க்கப்பட்டுள்ளது. இஞ்சியில் உள்ள ஆக்சிஜனேற்ற, அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவி புரிகிறது. நீங்கள் சாப்பிடும் தேநீரில் இஞ்சியை நசுக்கி போட்டு கொதிக்க வைத்து குடிப்பது நன்மை பயக்கும்.

ADVERTISEMENT

டார்க் சாக்லேட் (Dark Chocolate): நீங்கள் அதிகமாக சாக்லேட் சாப்பிடுபவராக இருந்தால் உங்களுக்கு டார்க் சாக்லேட் சிறந்த தேர்வுகளில் ஒன்றாகும். உங்கள் சருமத்தை மெருகூட்டுவதற்கு டார்க் சாக்லேட் பயன்படுகிறது. இதில் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ளதால் சிறந்த ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் சருமம் நீரேற்றத்துடன் இருக்க உதவுகிறது. ஃபிளவனோல்கள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றிகளும் இருப்பதால் சூரிய ஒளிக் கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவுகிறது.

ஆளி விதைகள் (Flax Seeds): ஆளி விதைகளில் பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஆளி விதைகளுக்கு மிகவும் முக்கியமான பண்புகள் உள்ளன. ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், லிக்னான் ஆகியவை உள்ளதால் சருமத்தை நீரேற்றமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவி புரிகிறது.

ADVERTISEMENT

வெண்ணெய் (Butter): நமது முகத்தில் கரும் புள்ளிகள், சுருக்கங்கள் இருந்தால் வெண்ணெய்யை நமது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் நிறைந்துள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு ஆரோக்கியமான சருமத்தை பெற உதவுகிறது. வெண்ணெய்யில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் சருமத்தை சேதப்படுத்தும், வயதானது போல தோற்றம் தரக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடவும் உதவுகிறது.

லவங்கப்பட்டை (Cinnamon) : பிரியாணியில் பயன்படுத்தப்படும் லவங்கப்பட்ட சருமத்தை பாதுகாக்க மிகவும் உதவி புரிகிறது.
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு லவங்கப்பட்டை என்பத்பு சிறந்த தீர்வாக உள்ளது. தேநீர், காபி போன்றவற்றில் லவங்கப்பட்டை சேர்த்துக் கொதிக்க வைத்து குடிக்கலாம். லவங்கப்பட்டை நமது சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை தூண்டி சருமம் பளபளப்பாக இருப்பதற்கு உதவி புரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share