இன்றைய நாட்களில் ஷவர்மா பற்றிய கருத்துகள் ஆரோக்கியமற்றதாக இருக்கிறது. இந்த நிலையில் கடைகளில் வாங்கி சாப்பிடும் ஷவர்மாவுக்கு பதிலாக வீட்டிலேயே இந்த சைனீஸ் ஸ்பிரிங் ரோல் செய்து வார இறுதி நாளைக் கொண்டாடலாம்.
என்ன தேவை?
மைதா மாவு – ஒரு கப்
குடமிளகாய், கேரட், வெங்காயம் – தலா ஒன்று
வினிகர் – அரை டீஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
வெங்காயத்தாள் – 2
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
வெங்காயத்தாள், குடமிளகாய், கேரட், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். மைதா மாவில் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவுப் பதமாகப் பிசையவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு, வெங்காயம், குடமிளகாய், கேரட், வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு வினிகர், சோயா சாஸ், உப்பு சேர்த்துக் கலந்து வதக்கி இறக்கவும். மைதா மாவைச் சிறிய உருண்டைகளாக்கவும். உருண்டைகளை ஓவல் வடிவத்தில் தேய்க்கவும். ஒவ்வொன்றின் ஓரத்திலும் காய்கறிக் கலவையை வைத்துச் சுருட்டவும். பிறகு, சுருட்டிய ஸ்பிரிங் ரோலை ஆவியில் வேகவைத்து எடுத்து ஆறவிடவும். எண்ணெயைக் காயவிட்டு ஸ்பிரிங் ரோல்களை போட்டுப் பொரித்தெடுக்கவும். இதைச் சாஸுடன் சாப்பிட, சுவையாக இருக்கும்.
குறிப்பு:
ஸ்பிரிங் ரோல் பிரியாமல் இருக்க ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி, பிறகு சுருட்டவும். காரம் வேண்டும் என்றால் சிறிது மிளகாய்த்தூளைக் காய்கறியில் சேர்த்து வதக்கலாம்.
நேற்றைய ரெசிப்பி: காஜா!