ADVERTISEMENT

ரயிலில் இருந்தபடியே உணவு ஆர்டர் செய்து சாப்பிடலாம்.. எப்படி தெரியுமா?

Published On:

| By Santhosh Raj Saravanan

Food Order on Train Via Zomato Swiggy and IRCTC eCatering full details

ரயில் பயணங்களின்போது இருக்கையில் இருந்தபடியே உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.

ADVERTISEMENT

இந்தியாவின் மட்டுமல்ல உலகின் மிகப்பெரிய பொது போக்குவரத்தாக ரயில்வே உள்ளது. பேருந்து, விமானப் பயணங்களின் கட்டணத்தை விட மலிவான கட்டணம் என்பதால் அதிகமான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். குறிப்பாக ரயிலில் இருக்கும் கழிவறை வசதி, படுக்கை வசதி, நீண்ட தூரத்தை சிறிது நேரத்தில் கடந்துவிடும் வசதி ஆகியவை மக்கள் ரயிலை தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக உள்ளது. ரயிலில் ஏசி பெட்டிகள், சாதாரண படுக்கை பெட்டிகள், இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், முன்பதிவில்லா பெட்டிகள் உள்ளன.

ADVERTISEMENT

ரயில்களில் விற்பனை செய்யப்படும் டீ, காஃபி, ஸ்நாக்ஸ் மற்றும் உணவுப் பொருட்களை பயணிகள் பெரும்பாலும் விரும்புவதில்லை. இதனால் பயணம் முடியும் வரை பசியில் காத்திருக்க வேண்டிய சூழல் முன்பு இருந்தது. ஆனால், ரயிலில் இருந்தபடியே விரும்பிய ஹோட்டலில், விரும்பிய உணவை ஆர்டர் செய்து சாப்பிடலாம் என்ற விவரம் பலருக்கும் தெரிவதில்லை. தற்போது இந்திய ரயில்வே உணவு டெலிவரியை அதிகாரப்பூர்வமாகவே மாற்றிவிட்டது.

ரயிலில் உணவு ஆர்டர் செய்வது?

ADVERTISEMENT

MakeMyTrip ஆப் வழியாக Zomato உணவு டெலிவரி செயலி மூலம் ஆர்டர் செய்யலாம். Zomatoவின் ரயில் உணவு டெலிவரி சேவை இப்போது 130 ரயில் நிலையங்களில் உள்ளது. இதனால் பயணிகள் தங்கள் இருக்கைக்கே நேரடியாக உணவக உணவை ஆர்டர் செய்து சாப்பிடலாம்.

நீங்கள் MakeMyTripஇல் உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தால், Zomato செயலியில் பட்டியலிடப்பட்டுள்ள 40,000 க்கும் மேற்பட்ட உணவகங்களிலிருந்து ஆர்டர் செய்வதற்கான ஆப்ஷனை காண முடியும்.

ADVERTISEMENT
  • MakeMyTrip செயலியில் ரயில் நிற்கும் நிலையத்தைப் பொறுத்து உங்கள் உணவைத் தேர்வு செய்யவும்.
  • ரயில் நிலையத்திற்கு வந்ததும் உங்கள் உணவு நேரடியாக உங்கள் பெட்டிக்கு டெலிவரி செய்யப்படும்.
  • உங்கள் PNR-ஐப் பயன்படுத்தி ஏழு நாட்களுக்கு முன்பே உணவை முன்பதிவு செய்யலாம்.
  • உணவு தயார் செய்வதற்கு முன்பாக உங்கள் ஆர்டரை நீங்கள் கேன்சல் கூட செய்துகொள்ளலாம், 100 சதவிகிதம் ரீபண்ட் வழங்கப்படும்.

ஸ்விகி

ஸ்விகியின் Order Food on Train ஆப்ஷன் வாயிலாகவும் உணவு ஆர்டர் செய்யலாம். ஸ்விகி தனது ரயில் உணவு டெலிவரி சேவையை நாடு முழுவதும் உள்ள 122 ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தியுள்ளது. 4 நாட்களுக்கு முன்பு வரை ரயில் பயணிகள் உணவு ஆர்டரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Order Food on Train ஆப்ஷனுக்கு சென்றதும் PNR எண் கேட்கப்படும். PNR எண்ணை பதிவு செய்து உணவு ஆர்டர் செய்துகொள்ளலாம். பல நாள் பயணங்களுக்கு, குறிப்பாக நீண்ட தூர பயணங்களுக்கு உணவைத் திட்டமிட விரும்பும் பயணிகளுக்கு, ஸ்விகி பெரிய நன்மையாகும்.

IRCTC eCatering மூலம் உணவை ஆர்டர் செய்யலாம்

நீங்கள் 3வது டெலிவரி நிறுவனங்களை நம்பி இருப்பதை விட IRCTCயை பயன்படுத்தலாம். ஆப்பில்
IRCTC eCatering என்ற ஆப்ஷன் உள்ளது. அத்தோடு Food on Track (IRCTC இன் அதிகாரப்பூர்வ உணவு விநியோக செயலியைக் கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

  • முதலில் உங்கள் PNR எண்ணை உள்ளிட வேண்டும்.
  • எந்த ரயில் நிலையங்களில் ஆர்டர் செய்யலாம் என்பதைச் சரிபார்க்கவும்.
  • ரயில் நிலையம் இருக்கும் ஊரின் ஒரு உணவகத்தைத் தேர்ந்தெடுத்து நீங்கள் ஆர்டர் செய்யலாம்
  • நிலையத்தில் ரயில் நிற்கும்போது உங்கள் உணவு டெலிவரி செய்யப்படும்.

ரயில் நிலையத்தைப் பொறுத்து, சாப்பாடு, பிரியாணி முதல் பீட்சா மற்றும் சிற்றுண்டி வரை மெனுவில் அனைத்தும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share