அதிமுக பொதுக்குழு : மட்டன் குழம்பு.. வஞ்சிர மீன் வறுவல்.. தடபுடலான மெனு

Published On:

| By Pandeeswari Gurusamy

Food list for AIADMK general committee participants

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெறும் நிலையில் மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன் வறுவல் தடபுடலான உணவு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (டிசம்பர் 10) அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெறுகிறது. இந்நிலையில் கூட்டத்திற்கு வந்துள்ள கட்சி நிர்வாகிகளுக்கு தடபுடலான உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT

காலை உணவு

கேசரி, வடை, பொங்கல், இட்லி, சாம்பார், கார சட்னி, தேங்காய் சட்னி, வாட்டர் பாட்டில், காபி / டீ.

அசைவம்

அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மதியம் பிரட் அல்வா, மட்டன் பிரியாணி, தாளிச்சா, ஆனியன் தயிர் பச்சடி, கத்திரிக்காய் கட்டா, மட்டன் குழம்பு, சிக்கன் 65, வஞ்சரம் மீன் வறுவல், முட்டை மசாலா, வெள்ளை சாதம், தக்காளி ரசம், தயிர், இஞ்சி புளி மண்டி, பருப்பு பாயாசம்

ADVERTISEMENT

சைவம்

சைவம் சாப்பிடுபவர்களுக்கு மதியம் தம்ஃப்ரூட் அல்வா, புடலங்காய் கூட்டு, சைனீஸ் பொரியல், மாவடு இஞ்சி, நிலக்கடலை மண்டி, பிளாக்காய், உருளை மசாலா, பருப்பு வடை, அப்பளம், ஊறுகாய், மோர் மிளகாய், வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, சாதம், கத்தரிக்காய், முருங்கக்காய், பீன்ஸ் சாம்பார், வத்தல் குழம்பு, தக்காளி ரசம், தயிர், பருப்பு பாயாசம், வாட்டர் பாட்டில், வாழைப்பழம்

ADVERTISEMENT

சிற்றுண்டி

மேலும் மிக்சர், சிப்ஸ், ஸ்வீட், பிஸ்கட், வாட்டர் பாட்டில் உள்ளிட்டவை பேக் செய்யப்பட்டு, நிர்வாகிகளின் இருக்கையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share