செம்மொழிப் பூங்காவில் உணவுத் திருவிழா!

Published On:

| By Monisha

சென்னை செம்மொழிப் பூங்காவில் நாளை, நாளை மறுநாள் (ஜூன் 24, 25 தேதிகளில்) உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.

பாதுகாப்பான உணவு ஆர்வலர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட உள்ள இந்தத் திருவிழா, புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழா என்றும் இலங்கை, மியான்மர் மற்றும் ஆப்கான் உணவுகள் இடம் பெறுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி இலவசம் என்றும் சிறப்பு மதிய உணவுக்கு குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த உணவுத் திருவிழா குறித்து கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில், வருகின்ற ஜூன் 24 மற்றும் 25 அன்று நடைபெறவிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள அழைக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் இதே நாட்களில் செம்மொழிப் பூங்காவில் உணவு மேளா நடைபெற்று சென்னைவாசிகளின் அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ராஜ்

TNPL: திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி!

ADVERTISEMENT

ரயிலில் இருந்து வெளியேறிய கரும்புகை… பதறிய பயணிகள்: ரயில்வே விளக்கம்!

Photo of author
Monisha
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share