பியூட்டி டிப்ஸ்: பொடுகைத் தவிர்க்க இதை ஃபாலோ செய்யுங்க!

Published On:

| By Kavi

Follow this Tips to avoid dandruff

தலையில் ஏற்படும் எரிச்சல் (Irritation), பூஞ்சை படிதல், உடலில் திடீர் மாற்றங்களால் ஏற்படும் இன்ஃப்லமேஷன் (Inflammation) போன்றவை காரணமாகத்தான் பொடுகு வருகிறது.

இதைத் தவிர்க்க, அவ்வப்போது  தலைமுடியை நன்றாக  அலசுவது அவசியம்.

ADVERTISEMENT

வெயிலில் அடிக்கடி வெளியே செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் அதிக நேரம் பயணிப்பவர்கள், அடிக்கடி ஹெல்மெட் அணிபவர்கள் தினமும், தூய நீரில் தலைமுடியை முழுவதுமாகக் கழுவி, தனித் துண்டினால் தலையைத் துடைக்க வேண்டும்.

அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே செல்லாதவர்கள், தலையில் அழுக்கு படியக்கூடிய இடங்களில் வேலை செய்யாதவர்கள், வாரம் இரண்டு மூன்று முறை தலைமுடியை நன்றாக அலசவும்.

ADVERTISEMENT

தலை முடி, எண்ணெய்த்தன்மையா, வறண்டதா என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற ஷாம்புவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மென்மையான (Mild) ஷாம்பு வகையைப் பயன்படுத்துவது நல்லது.

சோடியம் லாரையில் சல்பேட் (Sodium lauryl sulphate) என்பது, கடினத்தன்மைகொண்ட ஷாம்பு. இதில், ரசாயனங்களின் வீரியம் அதிகமாக இருக்கும். ஷாம்புவில் பிஹெச் (pH) அளவு 5.5 – 7 வரை உள்ள மைல்டு ஷாம்புவைப் பயன்படுத்துங்கள்.

ADVERTISEMENT

முடியின் வேர்ப்பகுதியில், தோல் எரிச்சல் ஏற்படும் அளவு, அழுந்த வாரக் கூடாது. அப்படி செய்தால்,பொடுகு அதிகரிக்கும்.

தினமும் இரண்டு மூன்று லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி போன்ற உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். நீர்ச்சத்து, தலைமுடிக்கு மிகவும் அவசியம்.

ஒரே சீப்பை வருடக்கணக்கில் பயன்படுத்துவதோ, குடும்ப உறுப்பினர் அனைவரும், ஒரே சீப்பைப் பயன்படுத்துவதோ தவறு. சீப்பு மூலமாக ஒருவர் தலைமுடியில் இருக்கும் கிருமிகள், மற்றொருவரின் தலைக்குப் பரவ வாய்ப்பு உண்டு. சீப்பை அடிக்கடி நன்றாகக் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவிற்கு வைக்கம் விருது!

பிள்ளை பெத்துக்க மாட்டேங்குறாங்க… மாற்றி யோசித்த ஜப்பான் அரசு

“பாரதியின் கனவு இன்று நனவாகியுள்ளது” : மோடி பேச்சு!

திருவண்ணாமலை வழியாக செல்கிறீர்களா? : போலீஸ் முக்கிய தகவல்!

மனைவி கொடுமையால் உயிரை மாய்த்த ஐ.டி ஊழியர்… எலான் மஸ்க்கை டேக் செய்த பின்னணி!

ஊழல் குற்றச்சாட்டு : அமெரிக்க நிதியை நிராகரித்த அதானி

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share