இன்றைக்கு சண்டே மட்டுமல்ல… சமையலறையில் எப்போதும் ‘ஹேப்பி குக்கிங்’ நடைபெற கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இதோ…
அம்மாவோ, மனைவியோ, கணவரோ யாராக இருந்தாலும், அவர்களின் சமையலைப் பாராட்டத் தவறாதீர்கள். சமையலில் ஏதாவது குறைகள் இருந்தால்கூட, அதை அவர்களின் மனது புண்படாமல் எடுத்துச் சொல்லுங்கள்.
நமக்காக ஒருவர் தனது நேரத்தையும், உழைப்பையும் செலுத்திச் செய்து தரும் சமையலைப் பாராட்டும்போதுதான் நமது செயல் அங்கீகரிக்கப்படுகிறது என்ற மனநிலை வரும். இதனால் ஒவ்வொரு முறையும் அன்போடும், அக்கறையோடும் சமைக்க முற்படுவார்கள்.
சமையலைக் குறை சொல்லி மனது நோகும்படி பேசிவிட்டால், அதையே நினைத்து அந்த நாள் முழுவதும் வருந்திக்கொண்டே இருப்பார்கள். இது அவர்களின் பிற வேலைகளையும், வளர்ச்சியையும்கூட பாதிக்கும்.
‘குழம்பு நல்லா இருக்கு, காரம் மட்டும் கொஞ்சம் அதிகமா தெரியுது. அவசரமா சமைச்சதால கவனிச்சிருக்கமாட்ட. நாளைக்கு நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன்…’ இப்படிச் சொல்லிப் பாருங்கள். உங்கள் வீட்டில் தினமும் ‘ஹேப்பி குக்கிங்’ தான்.
அடுத்து, சிறிய வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கிச்சனை பழக்குங்கள். சமையல் செய்யும்போது அவர்களையும் ஈடுபடுத்துங்கள். `உனக்குப் புடிச்ச கேசரி செய்யப் போறேன். நீயும் எனக்கு ஹெல்ப் பண்றியா?’ என்பது போல பேசி, அவர்களுக்கு சமையல் மீதான ஆர்வத்தை அதிகரியுங்கள்.
சிலர், ‘என் பிள்ளைங்களுக்கு கிச்சன் எந்தப் பக்கம் இருக்கு’ன்னு கூடத் தெரியாது என்று பெருமையாகச் சொல்வார்கள். அடிப்படை சமையல் தெரியாமல் வளர்பவர்கள் வெளி மாநிலத்துக்கோ, வெளிநாட்டுக்கோ படிக்க, வேலைக்காகச் செல்லும்போது அங்குள்ள உணவும் சாப்பிடப் பிடிக்காமல், நம் உணவுகளையும் சமைக்கத் தெரியாமல் அவதிப்படுவார்கள். வெளியிடங்களில் வேலை பார்க்கும் நிறைய இளைஞர்கள் ஹோட்டலைத்தான் நம்பியிருக்கின்றனர். நீண்ட காலம் ஹோட்ட லில் சாப்பிடுவது ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
சமையல் என்பது பெண்களுக்கானதோ, ஆண்களுக்கானதோ அல்ல. சமையல் என்பது மிகப் பெரிய `சர்வைவல் ஸ்கில்’. அதை அனைவரும் கற்றுக்கொள்ளுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மலாய் சம்சம்!
கிச்சன் கீர்த்தனா : காஜு பிஸ்தா ரோல்ஸ்
இன்னும் மாநாடே தொடங்கல, அதுக்குள்ள இப்படியா? – அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: கூட்டணித் தலைவர்களோடு 40 நிமிடங்கள்… ஸ்டாலின் வீட்டில் நடந்தது என்ன?