நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

Published On:

| By Selvam

folk singer kollangudi karuppayi passed away

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி இன்று (ஜூன் 14) வயது மூப்பு காரணமாக காலமானார்.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியைச் சேர்ந்தவர் கருப்பாயி. நாட்டுப்புறப் பாடகியான இவர் சிறிது காலம் வானொலியில் பணியாற்றினார்.

ADVERTISEMENT

இவரது திறமையை அறிந்த நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் கொல்லங்குடி கருப்பாயியை ஆண் பாவம் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்தார்.

தொடர்ந்து, ஆண்களை நம்பாதே, கோபாலா கோபாலா, கபடி கபடி, ஏட்டிக்கு போட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக சசிக்குமார் நடித்த காரி படத்தில் நடித்திருந்தார். 1993-ஆம் ஆண்டு இவரது கலை சேவையை பாராட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கி கெளரவித்தார். folk singer kollangudi karuppayi passed away

ADVERTISEMENT

இந்தநிலையில், வயது மூப்பு காரணமாக கொல்லங்குடி கருப்பாயி இன்று காலமானார். அவரது மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share