அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அலுவலகத்தில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் கடுமையான சோதனைகளை பறக்கும் படை மூலம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அலுவலகத்தில் பணப் பட்டுவாடா செய்யப்படுகிறது; வாக்காளர்களுக்கு கொடுக்க பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் ஆர்.பி. உதயகுமார் அலுவலகத்தில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது, தமக்கு எதிரான புகார்களை ஆர்.பி. உதயகுமார் திட்டவட்டமாக மறுத்தார்.
