இந்திய முன்னணி நிறுவனம் ஒன்று, மொத்தமாக 1500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
உலகளவில் கொரோனா பெருந்தொற்று பரவியபோது அதைக்காரணம் காட்டி, உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் ஊழியர்களை கொத்துக்கொத்தாக பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பின.
இதனால் கொரோனா பயத்தை விடவும் வேலை போய்விடுமோ என்ற அச்சம் தான் ஊழியர்கள் மத்தியில் பெரும் பிரச்சினையாக இருந்தது. கொரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்வதும் வெகுவாகக் குறைந்தது.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி இணையதள வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் மறுசீரமைப்பினைக் காரணம் காட்டி, ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
திறன் அடிப்படையில் ஊழியர்களை வகைப்படுத்தி அதில் கடைசியாக இருக்கும் 7% சதவீத ஊழியர்கள் அதாவது சுமார் 1500 ஊழியர்களை ஃப்ளிப்கார்ட் பணிநீக்கம் செய்யவிருக்கிறதாம். இந்த பணிநீக்கம் வரும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது.
2023-ம் ஆண்டில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வருவாய் ரூபாய் 56,013 கோடியாக இருந்தது என, வணிக நுண்ணறிவு நிறுவனமான டோப்ளர் தரவுகளை வெளியிட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு உலகின் முன்னணி நிறுவனமான வால்மார்ட், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Video: திடீரென கன்னத்தில் விழுந்த அறை… ஜெயிச்சிட்டா உங்களுக்கு கண்ணு தெரியாதே!
போக்குவரத்து ஊழியர் போராட்டம்… அரசு என்ன செய்யப் போகிறது? அமைச்சர் சிவசங்கர் பதில்!