ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: விஜய் வீட்டில் சீமான்.. நடுரோட்டில் காருக்குள் நடந்த ‘அந்த’ சம்பவம்.. பரபர ஃப்ளாஷ்பேக்!

Published On:

| By Mathi

Vijay Seeman

வைஃபை ஆன் செய்ததும், ”சிலவகை பேச்சுகள் எல்லா நேரமும் ஒர்க் அவுட் ஆகாது என்பது சரிதான் போல” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

என்னய்யா மழைக்கு நடுவே வாண வேடிக்கையா?

ADVERTISEMENT

ஆமாய்யா.. இது நமத்து போகாத ‘நாட்டு’ ரகம்யா..

எந்த கட்சிப்பா? ‘சுதேசி ரகமா’, ‘தற்சார்பு ரகமா?

ADVERTISEMENT

எனக்கு மேல பூடகமா பேசுறீரு.. அவங்களுக்கு இப்படி எல்லாம் பேரு இருக்கா? தற்சார்பு பொருளாதாரம் பத்தி பேசுற சீமான் விஷயம்தான்..

என்னப்பா வில்லங்கமா?

ADVERTISEMENT

நீங்க நினைக்கிற மாதிரி புதுச்சேரியில ரிப்போர்ட்டரை அடிக்க பாய்ஞ்ச மேட்டர் இல்லை.. கூட்டணியே இல்லை.. இல்லைன்னு பேசிட்டு கூட்டணிக்காக நேருக்கு நேராக விஜய் வீட்டுக்கே போய் பேசுனதைப் பத்திதான் சொல்லப் போறேன்..

அடடே.. ‘அந்த சந்திப்பா?

ஆமாய்யா.. மேடைகளில் சீமான் அதிகமாக வெளுத்தெடுக்கிறது என்னவோ நடிகர் விஜய்யைத்தான்.. தவெகவை கடந்த சில மாதங்களாக ரொம்பவே காட்டமாக விமர்சிக்கிறாரு..

இப்படி சீமான் உக்கிரமா பேசுவதற்கு முன்பு தவெக தலைவர் நடிகர் விஜய்யை அவருடைய வீட்டுக்கே போய் சீமான் சந்திச்சு பேசுனார்..

இதுபற்றி விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் நாம பேசுனப்ப, “6 மாசத்துக்கு முன்னாடி தளபதியை பார்க்க சீமான் வந்தாரு.. பனையூர் வீட்டுலதான் இந்த சந்திப்பு நடந்துச்சு.. சீமானும் விஜய்யும் 3 மணிநேரத்துக்கும் மேல கூட்டணி பற்றி ரொம்ப சீரியசா பேசுனாங்க.. இந்த பேச்சு முடிஞ்சு சீமான் கிளம்புற வரைக்கும் சுமூகமாகத்தான் இருந்தது நிலவரம்..

சீமான் வெளியே கிளம்பினப்ப, ”நானே உங்களை வீட்டுல டிராப் பண்றேன்னு” காரை தளபதி எடுத்தாரு.. தளபதிதான் காரை ஓட்டிகிட்டும் போனாரு.. அப்பதான் நிலவரம் வேற மாதிரி ஆகிடுச்சு..

அப்ப சீமான்கிட்ட, ”காங்கிரஸ் கட்சி நம்ம கூட கூட்டணிக்கு வர்றது பத்தி உங்க ஒப்பீனியன் என்னங்க அண்ணா?”-ன்னு தளபதி கேட்டாரு..

அதுக்கு காருக்குள் இருந்தபடியே சீமான், “ஈழத் தமிழர்களை திட்டம் போட்டே கொன்று அழிச்ச கட்சி அது.. அவங்களை கூண்டோடு அழிக்காம விடக் கூடாதுங்க தம்பி” என ஸ்டிராங்கா பேசினாரு சீமான்..

சீமான் பேசி முடிக்க.. அவரோடு வீடும் வந்துருச்சு..
அப்ப, “உள்ள வாங்க.. வந்து டீ.. காபி சாப்பிட்டுப் போகலாம்னு” தளபதியை சீமான் அழைச்சாரு..

ஆனா, சீமானை அவரது வீட்டு வாசலிலேயே இறக்கிவிட்டு, அப்படியே காரை திருப்பிட்டார் தளபதி.. சீமான், காங்கிரஸுக்கு எதிரான பேசுனதுல தளபதி ரொம்ப அப்செட் ஆனதால ‘யூடர்ன்’ அடிச்சுட்டார்..

ஏன்னா காங்கிரஸ் கட்சி எப்படியும் நம்ம கூடத்தான் கூட்டணிக்கு வரும்னு ரொம்பவே மலை போல இன்னைக்கும் நம்பிகிட்டே இருக்கிறாரு தளபதி.. காங்கிரஸ்+ தவெக+ சீமான் என ஒரு கணக்குப் போட்ட தளபதிக்கு சீமான் பேச்சு செம்ம அப்செட்டைதான் தந்துச்சு.. இதை பற்றி தவெக நிர்வாகிகள் ஒன்றிரண்டு பேருகிட்டதான் தளபதி ஷேர் செஞ்சாரு..

இதுக்குப் பிறகு தளபதியும் வேற எந்த மூவ் எடுக்கலை.. ஆனா சீமான் சைடில் இன்னைக்கு வரை ஒரே அட்டாக்தான்..” என்கின்றனர்.

விஜய்யை சீமான் விமர்சிக்க என்ன என்னவோ காரணம் சொன்னாங்க.. சொல்றாங்க.. ஆனா விஜய்யை சீமான் நேரில பார்த்து பேசப் போய் ’பேக் பயர்’ ஆனதுதான் சரியான காரணம் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share