தெலங்கானா: மூன்றாவது இடத்தை நோக்கி முதல்வர் கே.சி.ஆர்.?

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

தெலங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளுக்கும் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 2 முறை முதல்வராக இருந்த சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி அங்கு பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

இதனால் முதன்முறையாக காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது நண்பகல்  நிலவரப்படி அங்கு மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 65 இடங்களில்  முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கேசிஆர் கட்சி 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல பாஜக  8 இடங்களிலும், ஓவைசி தலைமையிலான கட்சி 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் தான் போட்டியிட்ட கஜ்வெல் தொகுதியில் பாஜக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் இருக்கிறார்.

அவர் போட்டியிட்ட இன்னொரு தொகுதியான  காமாரெட்டி தொகுதியில்  காங்கிரஸ் வேட்பாளர் ரேவந்த் ரெட்டியிடம் காலை முதலே பின்னடைவையும் சந்தித்து வருகிறார்.

காமரெட்டி தொகுதியில் ஏழாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில்  22 ஆயிரத்து 515 வாக்குகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். அவரையடுத்து இரண்டாவது இடத்தில் கேசிஆர்  20 ஆயிரத்து 554  வாக்குகள் பெற்றுள்ளார்.  மூன்றாவது இடத்தில் இப்போது இருக்கும் பாஜக வேட்பாளர் வெங்கட்ரமண ரெட்டி  20 ஆயிரத்து 79 வாக்குகள் பெற்று, கே.சிஆரை விட 500க்கும் விட குறைவான வாக்குகளே பெற்றிருக்கிறார்.  அடுத்தடுத்த ரவுண்டுகளில்  பாஜக வேட்பாளர் இரண்டாவது இடத்தைப் பிடித்து கே.சி.ஆர். மூன்றாவது இடத்தை நோக்கி தள்ளப்படும் சூழலும் உருவாகலாம் என்கிறார்கள் தெலங்கானா அரசியல் வட்டாரங்களில்.

தற்போதைய நிலவரப்படி காமரெட்டி தொகுதியில்  பாஜகவிடம் இரண்டாவது இடத்துக்கும் போராடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் கே.சி.ஆர்.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

ராஜஸ்தான்: தோல்வியை நோக்கி காங்கிரஸ்… கொண்டாடும் பாஜக!

சத்தீஸ்கர்: பாஜக- காங்கிரஸ் இடையே பல தொகுதிகளில் மிகக் குறுகிய வித்தியாசம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *