ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் ராகுல்காந்தி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ராஜஸ்தானின் பார்மரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
அப்போது ”இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றதற்கு காரணம் ஒரு ’பனாட்டி’(பீடை) தான் என்று பேசினார்.
ராகுல்காந்தி பெயர் சொல்லாமல் கூறியிருந்தாலும், அவர் பிரதமர் மோடியைதான் சொல்வதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
மேலும் ’பிக் பாக்கெட்’ என்று மோடியை குறிப்பிட்டதற்காக பாஜக தேர்தல் குழு அளித்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில் இன்று(டிசம்பர் 3) நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் சமயத்தில் ராகுல்காந்தி கூறிய அதே வார்த்தைகளை பயன்படுத்தி பாஜகவினர் தற்போது அவரை விமர்சித்து வருகின்றனர்.
கர்நாடகவைச் சேர்ந்த பாஜக தலைவர் சி.டி.ரவி, “பெரிய பனாட்டி யார்?’, ’காங்கிரஸுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பிற்குப் பிறகு அந்த பனாட்டி எங்கே விடுமுறைக்குப் போகிறார்?’ என்று ராகுல்காந்தியை டேக் செய்து பதிவு வெளியிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் அவரை பனாட்டி என்று குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
அதேபோல் சனாதனத்தை எதிர்த்து பேசிய உதயநிதியால் தான் வட இந்திய மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றியை பெற்றுள்ளதாக கூறி, அவருக்கு எதிராகவும் ஹேஸ்டேக் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இந்திய சினிமாவில் தொடரும் ஷாருக்கான் சாதனைகள்!
மீண்டும் கூடுகிறது ‘இந்தியா’ கூட்டணி!