40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் இன்று (டிசம்பர் 4) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதில் மிசோரம் மாநிலத்தை தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது.
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) 23 தொகுதிகளில் முன்னிலையும், ஒரு தொகுதியில் வெற்றியும் பெற்றுள்ளது.
மிசோ தேசிய முன்னணி (MNF) 10 இடங்களில் முன்னிலையும், பாஜக 3, காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
செல்வம்