மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து பெரும்பான்மையான இடங்களில் பாஜக முன்னிலையை தக்கவைத்துள்ளது.
மத்தியபிரதேசத்தில் ஆளும் பாஜக – காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஆளும் பாஜகவே முன்னிலை வகித்தது.
நண்பகல் 12 மணி நிலவரப்படி ஆளும் பாஜக 160 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 67 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 116 தொகுதிகள் மட்டுமே தேவைப்படும் நிலையில் கூடுதலாக 44 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பது அக்கட்சி தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறும் பட்சத்தில் நான்காவது முறையாக மத்தியபிரதேச முதல்வர் நாற்காலியில் அமர்வார் சிவராஜ் சிங் சவுகான்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜகவை திரும்பி பார்க்க வைத்த 26 வயது சுயேட்சை வேட்பாளர்!
ம.பி. மக்களின் இதயங்களை மோடி தொட்டுவிட்டார்: சிவராஜ் சிங் சௌகான்