ம.பி. மக்களின் இதயங்களை மோடி தொட்டுவிட்டார்: சிவராஜ் சிங் சௌகான்

அரசியல் ஐந்து மாநில தேர்தல்

மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மை இடங்களுடன் பாஜக மறுபடியும் ஆட்சி அமைக்கும் என, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ” மத்திய பிரதேசத்தில் மக்களின் ஆசிர்வாதத்துடனும், பிரதமர் மோடியின் திறமையான தலைமையுடனும் பாஜக மீண்டும் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நான் நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ” பிரதமர் மோடி இங்கு பொதுக்கூட்டங்களை நடத்தியதன் மூலம் மக்களின் இதயங்களை தொட்டு விட்டார். அது இந்த தேர்தல் முடிவில் எதிரொலிக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை நாம் இங்கு முழுமையாக செயல்படுத்தினோம்.

அதேபோல இங்கு உருவான திட்டங்களும் மக்களின் மனங்களை கவர்ந்தன. மத்திய பிரதேசம் ஒரு குடும்பமாக மாறியது. மக்கள் நம் மீது வைத்திருக்கும் அன்பு முழுமையாக தெரிந்தது. அதனால் தான் நான் முன்னரே பாஜக இங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கூறினேன்,” என்றார்.

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்-பாஜக இடையில் நேரடி போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அங்கு பாஜக 155 இடங்களிலும், காங்கிரஸ் 72 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

மஞ்சுளா

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்… 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சத்தீஸ்கர்: வெற்றியை நோக்கி பாஜக!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *