சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று (டிசம்பர் 3) தெரிந்து விடும்.
பாஜக அங்கு 2003 தொடங்கி 2018 வரை சுமார் 15 ஆண்டுகள் ஆட்சியை தக்க வைத்திருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் அங்கு ஆட்சிக்கு வந்தது. முதல்வராக பூபேஷ் பாஹல் இருந்து வருகிறார்.
சத்தீஸ்கரை பொறுத்தவரை மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 46 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சி கட்டிலில் அமரும். அதன்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சி அங்கு மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
2018-ம் ஆண்டு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை காங்கிரஸ் அங்கு நிறைவேற்றி இருக்கிறது. அதோடு அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 32% இருக்கும் பழங்குடி மக்களின் வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கே சாதகமாக உள்ளது.
இதனால் பாஜக-காங்கிரஸ் என இருமுனை போட்டி நிலவினாலும் கூட காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக தெரிகிறது. எனினும் கடைசியில் வெற்றிவாகை சூடப்போவது காங்கிரஸா? இல்லை பாஜகவா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
NZ vs BAN: நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்
அமலாக்கத்துறை அதிகாரி கைது: அரசியல் தலைவர்கள் ரியாக்ஷன்!