ராஜஸ்தானில் பாஜக 107 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் 25ஆம் தேதி 199 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.
இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் என்ணப்பட்டன.
இதில் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது.
காலை 10 மணி நிலவரப்படி பாஜக 107 தொகுதிகளுடன் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் 80 இடங்களுடன் பின்தங்கியுள்ளது. பிற கட்சிகள் 12 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
கடந்த 2018 தேர்தலில் பாஜகவுக்கு 38.77 சதவீதமும், காங்கிரஸுக்கு 39.30 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன. எனினும் 100 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் அரியணையில் அமர்ந்தது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறியிருந்தன. அதேபோல் தற்போது பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதை தொடர்ந்து அக்கட்சி உறுப்பினர்கள் கொண்டாடி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உருவானது மிக்ஜாம் புயல்… சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!
தெலங்கானா: இரு தொகுதிகளிலும் பின் தங்கும் கே.சி.ஆர்.