சீட் தராததால் பாஜகவில் இருந்து வெளியேறி தேர்தலில் போட்டியிட்ட 26 வயது சுயேட்சை வேட்பாளர் தற்போது முன்னிலை பெற்று பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் பாஜகவில் இருந்து வெளியேறினார் ரவீந்திர சிங் பதி.
எனினும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற உறுதியுடன் ஷியோ சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.
தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஷியோ தொகுதியில் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திர சிங் முன்னணியில் உள்ளார் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே வேளையில் காங்கிரஸ் வேட்பாளர் அமீன் கான், பாஜகவின் ஸ்வரூப் சிங் காரா, ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சியின் (ஆர்எல்பி) ஜலம் சிங் மற்றும் பிஎஸ்பியின் ஜெய் ராம் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி ராஜஸ்தானில் மொத்தமுள்ள 199 தொகுதிகளில் பாதிக்கும் மேலாக 107 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 74 இடங்களில் முன்னணி வகிப்பது. குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சத்தீஸ்கர்: வெற்றியை நோக்கி பாஜக!
ராஜஸ்தான் : ஆட்சியை பாஜகவிடம் இழக்கிறதா காங்கிரஸ்?
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்… 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!