-ராஜ திருமகன்
தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் (TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) தனது பொதுக்குழுக் கூட்டத்தில் சில ஆக்கப் பூர்வமான விசயங்களை தெரிவித்துள்ளது.
1.கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், VPF கட்டணத்தை ( Virtual Print Fee- ஒவ்வொரு படப் பிரதிக்குமான கணினி மென்பொருள் கட்டணம்- அதாவது திரையரங்கு உரிமையாளர்கள் வாங்கி இருக்கும் டிஜிட்டல் புரஜக்ஷன் கருவியின் விலையை நேர் செய்யும் கட்டணம் ) , Qube, UFO, PRO VA, Sony மற்றும் இதர டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்களுக்கு வாராவாரம் கொடுத்து வருகிறார்கள். ஆனால், அதே ப்ரொஜெக்டரில் திரையிடும் ஆங்கில மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு பல வருடங்களாக இந்த Qube, UFO, PRO VA, Sony போன்ற நிறுவனங்கள் VPF கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த பாகுபாட்டை டிஜிட்டல் நிறுவனங்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே, ஏப்ரல் 1, 2026 முதல் VPF கட்டணம் வசூலிப்பதை டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் ..
One Time Content Delivery கட்டணம் மட்டுமே ஏப்ரல் 1, 2026 முதல் தயாரிப்பாளர்கள் தருவார்கள் என டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் நிறுவனங்களுக்கு இந்த பொதுக்குழு தெரிவிக்க விரும்புகிறது. திரையரங்குகள் சொந்தமாகவோ அல்லது வாடகை மூலம் டிஜிட்டல் புரஜெக்டர்களை திரையரங்குகளில் நிறுவ வேண்டும். சொந்தமாக டிஜிட்டல் ப்ரொஜெக்டர் வைத்திருக்கும் திரையரங்குகள், One-Time Content Delivery Charge மட்டுமே வாங்க வேண்டும். VPF கட்டணம் வாங்க கூடாது என்று அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.
- தமிழ்நாட்டில் ஆயிரத்து நூற்றைம்பது திரையரங்கம் உள்ளது. அவற்றை ஒருங்கிணைத்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஒரு வெளிப்படைத் தன்மை கொண்டு வர, ஒருங்கிணைக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு , அனைவரும் அறியும்படியாக பொதுமைப்படுத்தப்பட்ட பாக்ஸ்-ஆஃபிஸ் கலெக்ஷன் டிராக்கிங் சிஸ்டம் (Centralized, Online Box Office Tracking Software System) வரவேண்டுமென்று நமது சங்கத்தின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு மென்பொருளைக் கொண்டு வர தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிப்ளெஸ் உரிமையாளர்கள் சங்கமும், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கமும் முழு ஒத்துழைப்பு தருமாறு இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது
- ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் கட்டணம் வசூலிக்கும் Book My Show, Zomato District போன்ற நிறுவனங்கள் அந்தந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு ஷேர் தர வேண்டும். திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்யும் நிறுவனம் என மூவருக்கும் சரிசமமாக ஷேர் தரப்பட வேண்டும் பார்வையாளர்கள் திரைப்படத்திற்கு தான் ஆன்லைன் புக்கிங் செய்கிறார்கள். எனவே, திரைப்படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கும் சரிசமமான ஷேர், அந்த வருவாயில் கொடுக்கப்பட வேண்டும் என இந்த பொதுக்குழு ஆன்லைன் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களையும் கேட்டு கொள்கிறது. ( சமோசா பாப்கார்ன் கூட ஆன்லைனில் வாங்குறாங்களே என்று சொல்லக் கூடாது . படத்துக்கு டிக்கட் வாங்காமல் சினிமா தியேட்டரில் ஆன் லைனில் பெப்சி, பாப்காரன் புக் செய்ய யாராவது வருகிறார்களா என்ன? அப்படி செய்து வாங்கிக் கொள்ள வந்தால் கொடுப்பார்களா என்ன?)
- தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) தொடங்கியுள்ள புதிய தொழிலாளர் அமைப்பின் மூலம், SWIPE CARD உதவியுடன் தொழிலாளர்கள் வருகையை பதிவு செய்து, அதன்படி அவர்களுக்கு வாராவாரம் சம்பளம் வழங்கும் முறைக்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு தருவதென முடிவு செய்துள்ளனர். இந்த டிஜிட்டல் வருகை பதிவேடு மூலம் சரியான முறையில் சம்பளங்கள் தொழிலாளர்களுக்கு வழங்க முடியும் என்பதால், நமது சங்கம் சம்மேளனத்தின் இந்த முயற்சிக்கு ஆதரவு தர முன் வந்துள்ளது.(சம்மேளனமே சொல்லி விட்ட பிறகு , ” அதெல்லாம் முடியாது . தினசரி கொடுக்க வேண்டும் ” என்று தொழிலாளர்கள் சொல்லப் போவது இல்லை)
- தமிழ்நாட்டில் சிங்கிள் விண்டோ கிளியரன்ஸ் (Single Window Clearance) மூலம் திரைப்பட ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கவும், சென்னை நகரில் பகல் நேரத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வேண்டி, ஒரு கோரிக்கையை சில வருடங்களுக்கு முன்பு நமது சங்கம் சார்பில் வைக்கப்பட்டது. அதற்காக, சென்னை நகரில் எந்தெந்த தெருக்கள் பகல் நேரத்தில் படப்பிடிப்புக்கு உகந்தது என்று ஆய்வு செய்யப்பட்டு விபரங்கள் கொடுக்கப்பட்டது. அந்த அனுமதியை விரைவில் தருமாறு தமிழக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.. நியாயமாதான் இருக்கு .
