சருமம் பளபளப்பாக இருப்பதற்கு க்ரீம்கள் பூசுவதை விட, சில உணவுப் பொருட்களை சாப்பிட்டாலே போதுமானது.
2026 புது வருடம் தொடங்கியவுடன் அனைவரும் ஜிம்மில் சேர்வது, சரும பராமரிப்பு என எதையாவது ஒன்னை தொடங்கி இருப்போம். என்னதான் சருமத்திற்கு கிரீம்களை தடவிக் கொண்டிருந்தாலும், நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுதான் நம் ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கும். உள்ளிருந்து ஊட்டச்சத்து பெறுவதன் மூலமே ஆரோக்கியமான சருமத்தை பெற முடியும்.
பளபளப்பான சருமத்தைப் பெற ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சருமத்தை பொலிவாக்க பின்பற்ற வேண்டிய ஐந்து உணவு பழக்கங்களை காணலாம்.
அவகேடோ
அடகேடோவில் ஆரோக்கியமான கொழுப்புகள் ஏராளமாக இருப்பதால், சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அவேகேடோ சரும நீரேற்றமாக வைத்திருக்கவும், சருமத்தை வலுப்படுத்தவும் உதவுகின்றன. இதில் வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்றப் பண்புகளும் உள்ளன. அவை மாசுபாடு மற்றும் புற ஊதா கதிர்வீச்சு காரணமாக சருமத்திற்கு ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தைத் தடுக்க உதவுகின்றன. தொடர்ந்து அவகேடோ சாப்பிடுவதன் மூலம் தோல் சுருக்கத்தில் இருந்து விடுபடலாம்
மீன்
சாலமீன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி ஆகியவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் சரும வீக்கம் மற்றும் வறட்சியைத் தடுக்கிறது. ஒமேகா-3 சரும வீக்கத்தை குறைக்கவும், முகப்பரு வெடிப்புகளை சரி செய்யவும், தெளிவான நிறத்தைப் பெறவும் உதவுகிறது. தொடர்ந்து மீன் சாப்பிடும்போது சருமம் நீண்ட காலத்திற்கு மிருதுவாகவும், மென்மையாகவும் மாறும்.
நட்ஸ் மற்றும் விதைகள்
பாதாம், வால்நட்ஸ், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகளில் சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இவற்றில் ஏராளமான துத்தநாகம், செலினியம் மற்றும் வைட்டமின் ஈ உள்ளன. அவை சருமத்தின் பொலிவை மேம்படுத்த உதவுகின்ற. சுற்றுச்சூழல் சீர்கேட்டிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. வால்நட்ஸில் ஒமேகா-3 உள்ளது, இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் தோலை பளபளக்கச் செய்கிறது .
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது சருமம் வறட்சி அடைவதை தடுக்க உதவுகிறது. இயற்கையான சூரிய கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது. உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்ற நீங்கள் தொடர்ந்து சர்க்கரைவள்ளிக் கிழங்கைச் உணவில் சேர்க்கலாம்.
கிரீன் டீ
கிரீன் டீயை தொடர்ந்து குடிப்பது சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. க்ரீன் டீயில் சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றிகள் உள்ளன. இதனால் முன்கூட்டியே வயதாவதை தடுக்கும் ஆற்றல் க்ரீன் டீயில் உள்ளது. தொடர்ந்து க்ரீன் டீ குடித்து வர நமக்கே மாற்றம் தெரியத் தொடங்கும்.
2026 ஆம் ஆண்டில் சரும பராமரிப்புகளில் இந்த ஐந்து உணவுப் பழக்கங்களை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமான சருமத்தை பெற உதவும்.
