தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 14ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்த தடை காலத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்வது கிடையாது. கரைகளில் மீன் பிடிக்கும் பைபர் படகு, கட்டுமர மீனவர்கள் மட்டும் கடலுக்குள் மீன் பிடித்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக மீன்பிடி தடைக்காலம் ஆரம்பித்த நாள் முதல் மீன் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். பழைய மீன் ஏலம் விடும் பகுதி மக்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். பழைய மீன் ஏலம் விடும் பகுதி மக்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது.
மீன் வரத்து குறைவு காரணமாக மீன்கள் விலை பல மடங்கு உயர்ந்து இருந்தது. 650 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறிய வகை வஞ்சிரம் 1,200 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதேபோல் பெரிய வகை வஞ்சிரம் 2500 ரூபாய் வரை விற்கப்பட்டது.
எனினும் மீன் பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் காசிமேடு மீன்மார்க்கெட் களை கட்டி இருந்தது. அதிக விலைக்கு மீன்கள் விலை போனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, “மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைவு, மீன்பிடி தடைக்காலம், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மீன் விலை உயர்ந்துள்ளது” என்று கூறினர்.
.